1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (14:46 IST)

மனைவிக்கு தன் படத்தில் வாய்ப்பளித்த பா ரஞ்சித்!

பா ரஞ்சித்தின் மனைவி அனிதா நட்சத்திரம் நகர்கிறது படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான தென்மா இசையமைக்கிறார். இந்நிலையில் பா ரஞ்சித்தின் மனைவி அனிதா இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதுபற்றி அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படம் முடிந்துவிட்டது. எனக்கு முதல் வாய்ப்பு வழங்கியதற்கு மகிழ்ச்சி. கல்லூரிக்கு பின்னர் உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி ரஞ்சித். ’ என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.