பா ரஞ்சித் தயாரித்த பொம்மைநாயகி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றாக யோகி பாபு நடிக்கும் பொம்மைநாயகி என்ற படம் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஷான் என்பவர் இயக்கி இருந்தார். திரையரங்க ரிலீஸில் நல்ல விமர்சனத்தைப் பெற்றாலும், வசூல் ரீதியாக இந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை. இந்நிலையில் இப்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 10 ஆம் தேதி முதல் ஜி5 தளத்தில் தொடங்கவுள்ளது.