1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (17:30 IST)

பா ரஞ்சித்தின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பா ரஞ்சித்தின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடித்து வரும் ’சால்பேட்டா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அவர் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்றும் அவற்றில் ஒன்று ‘குதிரைவால்’ என்ற திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியீடு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. குதிரைவால் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டேல் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது