திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (16:01 IST)

அக்ஷய் குமார் நடிப்பில் உருவான பெல்பாட்டம் டீசர் வெளியானது !

பெல்பாட்டம் டீசர் ரிலீஸ்

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் தற்போது பெல் பாட்டம், லக்‌ஷ்மி பாம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ராகவா லாரன்ஸ் இயக்கும் லஷ்மி பாம் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு பெல்பாட்டம் படத்தின் கடைசிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படம் கிளாஸ்கோவில்  நடைபெற்று முடிந்தது.  2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் தற்ப்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்பையும் அதிகரிக்க செய்துள்ளது.