1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (09:27 IST)

உறுதியானது பா ரஞ்சித்தின் பாலிவுட் படம்… வெளியான அப்டேட்!

இயக்குனர் பா ரஞ்சித் சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.

கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவ்விரண்டு படங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். இந்நிலையில் பா.ரஞ்சித் அடுத்து ஒரு ஹிந்தி படம் இயக்கப்போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். அந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் காலா படத்தின் வசூல் ரீதியான தோல்வியால் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

அதன் பின்னர் அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் இப்போது புதுமுகங்கள் நடிக்கும் நட்சத்திரம் நகர்கிறது மற்றும் விக்ரம்மோடு ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அவரின் பாலிவுட் படமான பிர்சா முண்டா இப்போது மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை நமா பிக்சர்ஸ் சார்பில் ஷாரின் மந்ரி, கிஷோர் அரோரா ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். தயாரிப்பாளர்களில் ஒருவர் இப்போது படத்தை மீண்டும் தொடங்குவதைப் பற்றி அறிவித்துள்ளார்.