வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (15:05 IST)

“இந்தியாவை நேசிக்கிறேன்… அரசாங்கத்தை அல்ல…” ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் சுதந்திர தின வாழ்த்து

ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதந்திர தின வாழ்த்து கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டில் தேசிய கொடியை வீடுகளில் பறக்கவிடவும், அனைவரும் சமூகவலைதளப் பக்கங்களில் தேசிய கொடியை தங்கள் புரொபைல் பிக்சராக வைக்கவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என்று பிரபலங்கள் அனைவரும் அதை செய்துள்ளனர். இந்நிலையில் ஆளும் பாஜக அரசு நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க சுதந்திர தினம், தேசிய கொடி ஆகியவற்றின் மூலம் திசை திருப்புகிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி சி ஸ்ரீராம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ”நான் எனது நாட்டை நேசிக்கிறேன். ஆனால் அரசாங்கத்தை அல்ல. ஜெய்ஹிந்த்” என்று கூறி சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.