1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (17:48 IST)

ஓவியா மீது பைத்தியமாக இருக்கும் சிறுவனின் அலப்பறை வீடியோ!

ஓவியா மீது பைத்தியமாக இருக்கும் சிறுவனின் அலப்பறை வீடியோ!

பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது. இணையத்தில் ஓவியா ரசிகர்கள் ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சிப்படை, ஓவியா பாசரை என அவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.


 
 
இத்தனை நாட்கள் நீங்க எல்லாரும் எங்கடா இருந்தீங்க என கேட்கும் அளவுக்கு ஓவியா மீது தீவிர அன்பு கொண்டு களம் இறங்கியுள்ளது இந்த ஓவியா ஆர்மி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை சீண்டும் வகையில் யாராவது நடந்து கொண்டால் அவர்களை கழுவி ஊத்துவதையே முழு நேர பணியாக இவர்கள் கொண்டுள்ளார்கள்.
 
மேலும் ஓவியா செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் ரசித்தும் அவர் கூறும் டயலாக்களை ஹிட்டாக்கி அதனை வைத்து ஓவியா ஆர்மியினர் செய்யும் அலப்பறை தாங்க முடியல. இந்நிலையில் ஓவியா ஆர்மியில் உள்ள சிறுவன் ஒருவன் செய்யும் அலப்பறை வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

 

நன்றி: Cinema 720
 
ஓவியா மீது தீவிர அன்பில் இருக்கும் இந்த அகில் என்ற சிறுவன் ஓவியா கூறும் டயலாக்களையும், அவர் பாடிய அந்த கொக்கு நெட்ட முட்டை பாடலையும் பாடி இணையத்தில் அசத்துகிறான். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.