திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (14:07 IST)

ஆரவ்வுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஓவியா! - கடுப்பான ஓவியா ஆர்மிஸ்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்1 மிகுந்த வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ஓவியா- ஆரவ் காதல் விவகாரம்,மருத்துவ முத்தம் போன்றவை தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்து மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா மிகுந்த பரபலமடைந்தார். 
 



இதையடுத்து இருவரும் இணைந்து ஏதேனும் ஒரு படத்தில் நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அது இப்போது நடந்துவிட்டது, ஆரவ், ஹீரோவாக அறிமுகமாகும் "ராஜபீமா" படத்தில் ஓவியா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். 





























இதுகுறித்து ஆரவ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஒரே ஒரு பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறோம். ஓவியா ஆர்மிக்கு இது ஒரு நல்ல செய்தி. தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 
 
இதற்கு பதிலளித்த ஓவியா, உன்னுடன் இணைந்து நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ஆரவ்” என்று கூறியிருக்கிறார். இதனால் இருவரது ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் இருந்தாலும் ஒரு சிலருக்கு கடுப்பேத்தியுள்ளது.