ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (21:00 IST)

ஓடிடியில் ரிலீஸாகும் பிரபல இயக்குனரின் படம்: பரபரப்பு தகவல்

ஓடிடியில் ரிலீஸாகும் பிரபல இயக்குனரின் படம்
ஏற்கனவே சூர்யாவின் சூரரைப்போற்று உள்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்களை இயக்கிய இயக்குனரின் படம் ஒன்று ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
விஜய் சேதுபதி நடத்த நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ’சீதக்காதி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி தரணிதரன். இவர் இயற்றிய அடுத்த திரைப்படமான ’ஒரு பக்க கதை’ என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகளாகியும் ரிலீசாகாமல் உள்ளது.
 
இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 25-ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ விளம்பரம் வெளிவந்துள்ளதால் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது