ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (17:10 IST)

இந்தி தெரியாது போடா...சொன்னது ஒன்று செய்யறது ஒண்ணு !. முன்னணி நடிகையை திட்டும் நெட்டிசன்ஸ்

சில தினங்களுக்கு முன் தினம் நான் தமிழ் பேசும் இந்தியன்ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்டை யுவன் சங்கர் ராஜா அணிந்திருக்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலதரப்பினரும் கருத்துகள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகர் அபி சரவணன்,  இந்தி தெரியாது போடா போன்ற வாசகங்கள் பிரபலமாகி வருவது தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று பிரபல காமெடி நடிகர் கருணாகரன் இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்ட டீசர்டை அணிந்துள்ளது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களி;ல் வைரல் ஆனது. இதனைத்தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிம் இந்தி தெரியாது போடா என்ர டீ சர்டை அணிந்த புகைப்படம் வைரல் ஆனது.

இதையடுத்து, தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது அதில் ஐவர்யராய் ராஜேஷ் 2017 ஆம்க் ஆன்உ டாடி என்ற படத்தில் பிரமோஷனில் தனக்கும் ஹிந்தி தெரியும் என்று பேசியுள்ளார்.  இதனால் நெட்டிசன்ஸ் அவரைத் திட்டி வருகின்றனர்.