5 வருடங்களாக பெட்டியில் கிடந்த படத்துக்கு ஓடிடி மூலமாக வழிபிறந்தது! என்ன படம் தெரியுமா?
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஒரு பக்கக் கதை படம் ஜி 5 ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் ஜெயராம் அவரின் மகன் காளிதாஸ் ஜெயராம், மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில், கோவிந்த் மேனன் இசையமைப்பில், சி.பிரேம் குமார் ஒளிப்பதிவில் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஒரு பக்கக் கதை. விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த படக்குழு, அடுத்ததாக உருவாக்கிய இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது.
ஆனால் 2015 ஆம் ஆண்டே அனைத்துப் பணிகளும் முடிந்தாலும், இன்னமும் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பின் ஓடிடி மூலமாக ரிலீஸுக்கு ஒரு வழி பிறந்துள்ளது. ஜி 5 நிறுவனம் அந்த படத்தை வாங்கியுள்ளதாகவும் விரைவில் ரிலிஸ் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.