திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (15:25 IST)

விஜய்யின் ''ரஞ்சிதமே'' பாடலுக்கு எதிர்ப்பு- !

விஜய்யின் வாரிசு படத்தின் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் மாலை படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை தமன் இசையில் விஜய் பாடியுள்ளார். பாடலுக்கான ப்ரோமோ இரு தினங்களுக்கு  முன்னர் வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில்  கடந்த 5 ஆம் தேதி மாலை படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியானது. இந்த பாடலை தமன் இசையில் விஜய் பாடியிருந்தார்.    விவேக் பாடல் வரிகள் எழுதியிருந்தார்.

இப்பாடல் டி-சீரிஸ் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இதுவரை 2.5  கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள் இப்பாடலைக் கொண்டாடி வரும்  நிலையில்,  ரஞ்சிதமே பாடலின் இடம்பெற்றுள்ள ''உச்சு கொட்டும்  நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே'' என்ற வரிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


மேலும், சிறுவர்கள் இப்பாடலின் வரிகளை அர்த்தம் புரியாமல் பாடுவர் என்பதால், சமூகப் பொறுப்பை கடைபிடிக்க வேண்டும் என சமூகவலைதளங்களில்  நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Edited by Sinoj