1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 ஜூலை 2017 (19:08 IST)

முதல் ப்ரோமோவிலேயே சர்ச்சை: தெலங்கானாவில் பிக் பாஸ்-க்கு எதிராக போர்கொடி!!

தெலுங்லில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, முதல் ப்ரோமோவிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி.


 
 
தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. 
 
அந்த ப்ரோமோவில் போட்டியாளர்கள் உள்ளே என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஓட்டையின் வழி எட்டிப்பார்ப்போம் என்று சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இதற்கு தெலங்கானா திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஜூனியர் என்டிஆர் இந்த ஷோவில் இருந்து விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.