வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (16:36 IST)

ஏ.ஆர் ரகுமானின் எரிச்சலை குறைத்த ஒரு வயது குழந்தை

ஏ.ஆர் ரகுமானின் எரிச்சலை குறைத்த ஒரு வயது குழந்தை

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தற்போது லண்டனில் 2.0 படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தி திரையுலகை சேர்ந்த பின்னணி பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது பெண் குழந்தை தன்னோட அப்பா போனில் இருந்து தவறுதலாக ஏ.ஆர் ரகுமானுக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளது.
உடனே போனை எடுத்த ரகுமான் அந்த குழந்தையுடன் சிரித்துப் பேசி விளையாடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் அட்னன் பகிர்ந்துள்ளார். ’போனுக்கு பாஸ்வேர்டு போடும் நேரம் வந்துவிட்டது. என் குழந்தை மெடினா என் போனை எடுத்து ஏ.ஆர். ரகுமானுக்கு வீடியோ கால் செய்துவிட்டார். பிறகு இருவரும் வீடியோ காலில் பேசினர்.

அதுமட்டுமில்லாமல் லண்டனில் 2.0 படத்துக்கு இசையமைக்கும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை அவளுக்குச் சுற்றிக்காட்டினார். இதற்குப் பதிலளித்துள்ள ரகுமான்’அன்புள்ள அட்னன்... அவளின் வீடியோ கால் என் எரிச்சலான மனநிலையையும் பணிச் சுமைகளையும் மாற்றியது அதனால் நன்றி மெடினா எனவும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” என்றும் ஏ.ஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரின் இந்த பதிவுகள் சமூகவலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.