அஜித்தின் படத்தை ரிலீஸ் செய்த தியேட்டருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு
அஜித் படத்தை ரிலீஸ் செய்த திரையரங்குக்கு 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான நேர்கொண்டபார்வை என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு குன்றத்துர் பரிமளம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தியேட்டரில் 100 ரூபாய் சினிமா டிக்கெட்டை ரூ.525 ரூபாய் என கூடுதல் விலைக்கு விற்பதாக செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் இந்த படத்தை தியேட்டரில் பார்த்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார்
கடந்து 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் குன்றத்தூர் பரிமளம் தியேட்டர் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 475 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran