திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (12:20 IST)

பிரபல இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்!

தெலுங்கு திரையுலகில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிலர்  பட வாய்ப்புகள் தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக  நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 
ஸ்ரீரெட்டியின் புகாரால் தெலுங்கு திரையுலமே அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து ஸ்ரீரெட்டிக்கு தெலுங்கில் படவாய்ப்புகள் தரப்படவில்லை.  அவருக்கு எதிராக தெலுங்கு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி, தனக்கு ஆந்திராவில்  பாதுகாப்பு இல்லை என்றும் இனிமேல் சென்னையில்தான் வசிப்பேன் என்று கூறி தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். இப்போது அவர் தனது வாழ்க்கை வரலாற்றை கூறும் ‘ரெட்டி டைரி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.  இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
 
சமீபகாலமாக பேஸ்புக்கில் பாலியல் புகார் கூறுவதை நிறுத்திவைத்திருந்த ஸ்ரீரெட்டி  இப்போது தெலுங்கு இயக்குனர் ராம்கி மீது  சாடியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில், இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு "இதனை எனக்கு எஸ்.எம். என்பவர் அனுப்பி வைத்தார். பாலியல் தேவைக்கு இளம் பெண்களை ராம்கி கேட்டு இருக்கிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" என்று கண்டித்து கருத்து பதிவிட்டுள்ளார். 
 
தெலுங்கு டி.வி விவாதங்களில் ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ராம்கி ஆரம்பத்தில் இருந்தே எதிராக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.