1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (09:30 IST)

என்.டி.ஆர் ட்ரைலருக்கு இவ்வளவு வரவேற்பா..!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. நடிகரும், என்.டி.ஆரின் மகனுமான பாலகிருஷ்ணா தனது அப்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இதனை இயக்குனர் க்ரிஷ் இயக்கியிருக்கிறார். 


 
இதில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலனும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதியும் நடித்து வருகிறார்கள். அதைத்தவிர நடிகை சாவித்ரியாக நித்யாமேனனும், ஶ்ரீதேவியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்திருக்கிறார்கள். 
 
இரண்டு பாகமாக உருவாகி வரும் என்.டி.ஆரின் பயோபிக்கிற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். 
 
முதல் பாகமான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’ வரும் ஜனவரி 9-ஆம் தேதியும், இரண்டாம் பாகமான 'என்.டி.ஆர் மஹாநாயகுடு' ஜனவரி 24-ஆம் தேதியும் திரைக்கு வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இதன் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை 6 மில்லியன்  பார்வையாளர்களை இந்த ட்ரைலர் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.