1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (13:44 IST)

தனுஷுக்கு நோ சொல்லி சிவகார்த்திகேயனிடம் அடைக்கலமான சமந்தா

வட சென்னை படத்திலிருந்து விலகிய சமந்தா, சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.


 
 
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கம் வட சென்னையில் முதலில் ஒப்பந்தமானவர் சமந்தா. சென்னை குடிசைவாழ் பெண்ணாக அவர் நடிப்பதாக இருந்தது. அதற்காக சென்னையின் குடிசைப் பகுதிகளுக்கு சென்று அங்குள்ளவர்களின் பேச்சு, நடைமுறைகளை கவனித்து வந்தார். பிறகு திடீரென்று அவர் படத்திலிருந்து விலக, அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், அடுத்த வருடம் தொடங்கயிருக்கும் சிவகார்த்திகேயன் - பொன்ராம் புராஜெக்டில் நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
தனுஷ் படத்தை மறுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாகியிருக்கும் சமந்தா ஏன்? எதற்கு? என்று பல்வேறு சந்தேக கேள்விகளை கோடம்பாக்கத்தில் உருவாக்கியிருக்கிறார்.