என் தலைவன் ஆரி எங்கடா? புரமோ பார்த்து கடுப்பான ரசிகர்கள்!

என் தலைவன் ஆரி எங்கடா? புரமோ பார்த்து கடுப்பான ரசிகர்கள்!
siva| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (10:02 IST)
என் தலைவன் ஆரி எங்கடா? புரமோ பார்த்து கடுப்பான ரசிகர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் அனிதா எண்ட்ரி ஆகும் காட்சிகள் உள்ளன. ஏற்கனவே விருந்தினர்களாக வந்த ஹவுஸ்மேட்ஸ் மூலம் அனிதாவின் தந்தை இறந்தது அனைத்து போட்டியாளர்களுக்கும் தெரிந்து இருந்த நிலையில் அனிதா வந்தவுடன் அவருக்கு அனைவரும் ஆறுதல் கூறும் காட்சிகள் உள்ளன

குறிப்பாக வேல்முருகன் ’இனிமேல் உனக்கு தந்தை நாங்கள்தான் கவலைப்படாமல் இரு’ என்று கூறுகிறார். எல்லோரும் அனிதாவை கட்டியணைத்து ’தந்தையை நினைத்து கவலைப் படாதே என்று ஆறுதல் கூறும் காட்சிகள் உள்ளன

ஆனால் இந்த புரமோவில் ஒரு காட்சியில் கூட ஆரியை எங்கேயும் காணவில்லை என்பது சற்று அதிர்ச்சியாக உள்ளது. இதனை அடுத்து எங்கடா என் தலைவன் ஆரி? என் தலைவன் இல்லாமல் என்னடா புரோமோ என்று விஜய் டிவியை ஆரி ஆர்மியினர் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய புரோமோவில் பலவிதமான காட்சிகள் வந்த போதிலும் ஒரு காட்சியில்கூட ஆரி மட்டுமின்றி பாலாஜியும் இல்லை என்பது ஒருவித சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :