1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2020 (18:18 IST)

நடிகையின் பெயரை பச்சை குத்தி, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற ரசிகர்!

நடிகையின் பெயரை பச்சை குத்தி, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற ரசிகர்!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. குஷ்புவுக்கு கோவில் கட்டியது தமிழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவரான நிவேதா பெத்துராஜ் என்ற நடிகைக்கு பிரபு என்ற வெறித்தனமான ரசிகர் இருந்த நிலையில் அவருடைய பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார் 
 
அதுமட்டுமின்றி அவர் எங்கு படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அவரை நேரில் சந்தித்து அவரது பெயரை பச்சை குத்தி அதை அவரிடமே காண்பித்துள்ளார். தனது பெயரை பச்சை குத்திய ரசிகரை பார்த்து ஆச்சரியம் அடைந்த நிவேதா பெத்துராஜ் அவருக்கு பாராட்டு தெரிவித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்
 
தனது விருப்பத்துக்குரிய நடிகையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர், அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் அந்த ரசிகர் என்பதும் அவை தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது