ஒன்பது வருடங்களுக்குப் பிறகு... குஷ்புவின் திடீர் முடிவு
ஒன்பது வருடங்களுக்குப் பிறகு திடீரென்று தெலுங்குப் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் குஷ்பு.
அவர் கடைசியாக நடித்த தெலுங்குப் படம் சிரஞ்சீவியின் ஸ்டாலின். அதன் பிறகு ராஜமௌலியின் யமதொங்காவில் கௌரவ வேடத்தில் நடித்தார் (அதனால் அதை கணக்கில் எடுக்க முடியாது). கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணின் படத்தில் நடிக்கப் போகிறார்.
த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தின் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதாக குஷ்பு கூறியுள்ளார்.