இந்த லாக்டவுனில் இது ரொம்ப அவசியமா..? கழுவி ஊற்றும் இணையவாசிகள் !

Papiksha Joseph| Last Modified புதன், 10 ஜூன் 2020 (15:57 IST)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த 'என்.ஜி.கே' படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

ஆனால், தற்போது இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங் இந்த லாக்டவுன் நேரத்தில் முதல் முறையாக சைக்கிள் ஓடுகிறேன் என கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் உலகமே ஊரடங்கை மதித்து வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் நேரத்தில் பலருக்கும் பரீட்சியமான நீங்கள் இப்படி ஊர் சுற்றினால் உங்களது ரசிகர்களும் இதை தானே ஃபாலோ பண்ணுவாங்க ஒழுங்கா வீட்டுக்கு போய் பத்திரமாக இருங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :