புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (08:30 IST)

பிக்பாஸ் நாமினேஷன்: கமல்ஹாசன் வைத்த சஸ்பென்ஸ்

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெற்று வருவது தெரிந்தது. அந்த வகையில் இந்த வாரமும் நேற்று நாம் நாமினேஷன் படலம் தொடங்கியது. பெரும்பாலானோர் கவினை காமினேஷன் செய்ததால் அவர் இந்த வார நாமினேஷனில் சிக்கியுள்ளார் 
 
இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளவர்கள் கவின், முகின், வனிதா மற்றும் ஷெரின் ஆகியோர் என பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஷெரின் முதல்முறையாக நாமினேஷனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை தற்போது பார்ப்போம்
 
சாண்டி: ஷெரின், வனிதா
முகின்: கவின், லாஸ்லியா
ஷெரின்: முகின், கவின்
லாஸ்லியா: வனிதா, ஷெரின்
தர்ஷன்: வனிதா, கவின்
வனிதா: முகின், கவின்
கவின்: வனிதா, ஷெரின்
சேரன்: கவின், முகின்
 
இந்த வாரம் நாமினேஷனில் கவின், முகின், வனிதா மற்றும் ஷெரின் ஆகியோர் இருந்தாலும் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும், எனவே பார்வையாளர்கள் யாரும் இந்த வாரம் வாக்களிக்க வேண்டாம் என்றும் கமல்ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் சஸ்பென்ஸ் ஒன்றை தெரிவித்தார். ஆனாலும் இந்த விஷயமும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது