1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (15:05 IST)

4 மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகும் நெற்றிக்கண்!

நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். பெண்களை கடத்தி கொல்லும் சைக்கோ கொலையாளியை (அஜ்மல்) கண் தெரியாத நாயகி நயன்தாரா எப்படி வீழ்த்துகிறார் என்பது சுவாரஸ்யமான த்ரில்லர் கதையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் ஆகஸ்டு 13 அன்று வெளியாகிறது.

இந்நிலையில் முதல்முறையாக நயன்தாராவின் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் ரிலீஸ் செய்கிறார்கள். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.