செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (16:53 IST)

கொரோனாவால் லாபம் அடைந்த நெட்பிளிக்ஸ் – 3 மாதத்தில் ஒரு கோடி புதிய வாடிக்கையாளர்கள்!

கொரோனா லாக்டவுனால் மக்கள் முடங்கியுள்ள நிலையில் நெட்பிளிக்ஸில் புதிதாக ஒரு கோடி புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் மக்கள் முடங்கி, பல தொழில் நிறுவனங்களும் நஷ்டமடைந்த சூழலில் ஓடிடி நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை புதிதாக சுமார் ஒரு கோடி புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது வழக்கமாக வாடிக்கையாளர்கள் இணையும் விகிதத்தை விட மூன்று மடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்ச் மாதத்தில் இருந்த வேகத்தை விட ஜூன் மாதத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் லாக்டவுன் நேரத்தில் நெட்பிளிக்ஸின் பங்குகள் மதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது.