நெருப்புடா... ரஜினி ரசிகராக நடிக்கும் விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் படம், நெருப்புடா. கபாலி படத்தில் இடம்பெற்ற பாடல்வரிதான் நெருப்புடா. அதை தனது படத்துக்கு வைத்ததற்கான காரணத்தை விக்ரம் பிரபு கூறினார்.
நெருப்புடா படத்தை அறிமுக இயக்குனர் அசோக்குமார் இயக்க, விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் தீயணைப்பு வண்டியின் ஓட்டுநராக விக்ரம் பிரபு நடிக்கிறாராம்.
அத்துடன் தீவிர ரஜினி ரசிகராகவும் படத்தில் வருகிறாராம். அதனால்தான் நெருப்புடா என்ற பெயரை தேர்வு செய்ததாக கூறினார்.
சரியான தேர்வுதான்.