புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (19:08 IST)

அடுத்த மாதமாவது ரிலீஸாகுமா செல்வராகவன் படம்?

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம், எப்போது ரிலீஸாகும் எனத் தெரியவில்லை.
 


 

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்டன. சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழும் கொடுத்துவிட்டனர். ஆனாலும், பைனான்ஸ் பிரச்னையால் படம் ரிலீஸாகாமல் தவிக்கின்றது. ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்து, இரண்டு மாதங்கள் கடந்த பின்பும் இன்னும் ரிலீஸாகவில்லை. அடுத்த மாதமாவது ரிலீஸ் ஆகுமா என ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.