திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:45 IST)

நீயா நானா கோபிநாத்தின் அண்ணனும் ஒரு நடிகரா? வைரலாகும் புகைப்படம்!

நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர் தனது அண்ணனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் தமிழகமெங்கும் பிரபலமானவர் கோபிநாத். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் முனைப்புப் பேச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் அண்ணன் விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களில் நடித்து வருவது இப்போது தெரியவந்துள்ளது. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் நடித்துவரும் பிரபாகரன்தான் கோபிநாத்தின் அண்ணனாம்.

இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.