என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை - நீது சந்திரா வேதனை

Murugan| Last Modified திங்கள், 13 நவம்பர் 2017 (16:48 IST)
தனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என நடிகை நீது சந்திரா வேதனை தெரிவித்துள்ளார்.


 
யாவரும் நலம், ஆதி பகவன், தீராத விளையாட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நீது. அப்படங்களுக்கு பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பாலிவுட்டில் நடிக்க முயன்றும் பெரிய வெற்றி இல்லை.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நீதுசந்திரா “ என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். 4 வருடத்திற்கு முன் எனது தந்தையை இழந்துவிட்டேன். எனவே, எனது குடும்பத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன். அனால், துரதிஷ்டவசமாக எனக்கு நிறைய வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனது திறமைகளும் கவனிக்கப்படவில்லை. என்னை வழிநடத்த சரியான ஆள் இல்லை. நான் எந்த தயாரிப்பாளருடனும், இயக்குனருடனும் இணைந்து பணிபுரிய தயாராக இருக்கிறேன்” என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :