1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2017 (19:25 IST)

சங்கமித்ரா வேடத்திற்கு தூது விட்ட நடிகை - நிராகரித்த படக்குழு

சங்கமித்ரா படத்திலிருந்து நடிகை ஸ்ருதிஹாசன் விலகியதால், அந்த வேடத்தை பெற பல நடிகைகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.


 

 
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின், இந்திய சினிமா உலகம் சரித்திர கதைகளின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது. இதில், ரூ.300 கோடி பட்ஜெட்டில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் விலகினார்.
 
எனவே, அந்த வேடத்தில் எந்த நடிகை நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், யாவரும் நலம், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நீது சந்திரா இப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “ஒரு நாடக நடிகையாக, தற்காப்பு வீரராக, அர்ப்பணிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன். இது எனக்கு பெருமையும், மகிழ்ச்சியும் கூட” என குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், இது பெரிய பட்ஜெட் படம் என்பதால் கதாபாத்திரத்தை ஏற்கும் நடிகை அதற்கேற்ற இமேஜ் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே, நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா உள்ளிட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் யார் என முடிவாகவில்லை” என படப்பிடிப்பு குழுவினர் கூறியுள்ளனர்.