1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (15:57 IST)

நடிகை நஸ்ரியா - பகத் ஃபாசில் திருமணம், கோலாகலமாக நடந்தது

நடிகரும் இயக்குனர் பாசிலின் மகனுமான ஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று காலை திருவனந்தபுரம் வேளியை அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.
பகத் ஃபாசிலும், நஸ்ரியாவும் காதலித்து வந்தனர். இருவரும் முஸ்லீம் என்பதால் இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆகஸ்ட் 21 திருமணம் என்று நிச்சயித்திருந்தனர்.
 
இன்று காலை திருவனந்தபுரம் வேளியை அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடந்தது. மலையாள திரையுலகினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். (திருமண சடங்கு முடியும் வரை மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லாலும், மம்முட்டியும் மட்டும் வரவில்லை)
 
வரும் ஞாயிறு இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.