1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:55 IST)

லோகேஷின் அடுத்த படத்தில் நயன்தாரா?... லேட்டஸ்ட் தகவல்!

மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் புகழ் வெளிச்சம் பெற்றவர் இயக்குனர் ரத்னகுமார். இதையடுத்து அவர் பெயரில் பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய ஆடை மற்றும் குலுகுலு ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை ஏமாற்றின.

இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை இலாகாவில் முக்கிய நபராக இருந்து வரும் ரத்னகுமார் அடுத்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சந்திரமுகி 2 படத்துக்குப் பிறகு லாரன்ஸ் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ள நிலையில் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.