வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:44 IST)

ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்கும் நயன்தாரா !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.  இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.  இன்னும் பத்து நாட்களில் இப்படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிவடையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் இயக்கிவரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் இரு படங்களிலும் நடிக்க நயன் தாரா ஒரேநேரத்தில் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.

இதுதவிர நெற்றிக்கண் என்ற படத்தில் நடிக்க நயன் தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்ஹ்டைய மிலிந்த் ராவ் என்பவர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.