1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (22:53 IST)

சூப்பர் ஸ்டார் -அட்லீ படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் !

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் அட்லீ.  இவர் இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல்,  பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து, பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் அட்லீ கதை சொல்லி உள்ளதாகவும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஷாருக்கான் - அட்லீ இணையும் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருவதால் இப்படப்பிடிப்பு முடிந்த பின் அட்லி – ஷாருக்கான் இணையும் பட ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கான் 2 கெட்டப்பில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.