1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 மே 2020 (11:04 IST)

என் குழந்தையின் வருங்கால அன்னை நயன்தாரா: அன்னையர் தின வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்

அன்னையர் தின வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்பதும் இருவரும் கணவன் மனைவி போலவே வெளிநாடுகள் உட்பட பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் அதிகாரபூர்வமாக இன்னும் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை என்பதும் விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையை வைத்து உள்ளது போல் உள்ளது. இந்த புகைப்படத்தை குறிப்பிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் ’எனது வருங்கால குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் நயன்தாராவுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்
 
இந்த புகைப்படமும் இயக்குனர் விக்னேஷ் ஸ்டேட்டசும் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா பரபரப்பு முடிந்த பின்னர் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் அடுத்த அன்னையர் தினத்தை இருவரும் தங்களுடைய குழந்தையோடு கொண்டாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது