செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (14:20 IST)

முதல்வர் மகளாக நடிக்கப்போகும் நயன்தாரா!

மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. பிருத்விராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் இந்தியாவையே மிரள‌ வைத்தது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில்  மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது இப்படக்குழுவினர் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளனர். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு. இந்த அழுத்தமான கதாபாத்திரம் நயன்தாராவிற்கு பொருத்தமாக இருக்கும் என்கிறது ரசிகர்கள் வட்டாரம்.