வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J. Durai
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (20:23 IST)

நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு யூ சான்றிதழ்!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.


அதிக அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதில்தான் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களின் வெற்றி உள்ளது. இந்தத்தரம் கொண்ட திரைப்படங்கள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ திரைப்படம் சிபிஎஃப்சியின் 'யு' சான்றிதழைப் பெற்று, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறந்த தொழில்நுட்பத் தரத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் & டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். ’உணவு’ என்ற தீம் கொண்ட இந்தப் படத்திற்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வசீகரமும்  முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.  படத்தில் ஜெய், சத்யராஜ் மற்றும் பிற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படம், குடும்ப பார்வையாளர்களுக்கு 100% பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க இருக்கிறது. சிபிஎஃப்சியின் 'யு' சான்றிதழுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. உலகளவில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபிக்கும் வகையிலான கதைக்களத்துடன் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் எஸ் இசையமைத்திருக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (வசனம்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா - ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.