இதுவரை இல்லாத நாளில் பீஸ்ட் ரிலீஸ்? விஜய் எடுக்க சொன்ன முடிவு!
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி புதன் கிழமை ரிலிஸ் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் ஏபரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே நாளில் இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் கேஜிஎப் 2 படமும் ரிலிஸ் ஆகிறது.
இதனால் இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் விஜய் பீஸ்ட் படத்தை ஒரு நாள் முன் கூட்டியே ஏப்ரல் 13 புதன் கிழமை ரிலீஸ் செய்ய சொல்லிக் கேட்டுள்ளாராம். அதனால் அதிக திரைகளில் ரிலீஸ் செய்து முதல் நாள் வசூலை அள்ளலாம் என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.