1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 7 ஜூலை 2014 (19:03 IST)

நயன்தாராவின் நைட் ஷோ - அடிபட்ட ஆரி

ஹீரோயின் ஓரியண்ட் படங்களில் இனி நடிக்கப் போவதில்லை. நாயகியை மையப்படுத்திய படத்தில் அனைத்துக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது என, நீ எங்கே என் அன்பே ரிலீஸின் போது கூறினார் நயன்தாரா.
சொல்லி ஏழு நாள் முடிவதற்குள் நயன்தாரா தனது முடிவை மாற்ற வேண்டி வந்தது. அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் சொன்ன திகில் கதை பிடித்துப் போக உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். ஹீரோ என்று ஆரியை சொன்னாலும் இந்தப் படத்தின் ஆதியும் அந்தமும் நயன்தாராதானாம். படத்துக்கு நைட் ஷோ என்று பெயர் வைத்துள்ளனர்.
 
படத்தை அறிவித்த கையோடு படப்பிடிப்பும் தொடங்கியது. ஆதி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சியை சென்னையை அடுத்த பொழிச்சலூரில் எடுத்தனர். உயரமான இடத்திலிருந்து ஆரி குதிப்பது போல் ஒரு காட்சி. ஆக்ஷன் சொன்னதும் ஆரி குதித்தார். அப்போது அவரது தோள்பட்டை தரையில் மோதியுள்ளது. அதில் தோள்பட்டை மூட்டு கீழிறங்க, வலியால் துடித்திருக்கிறார். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு கட்டு போடப்பட்டது.
 
இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.