மீண்டும் அம்மாவாகும் நயன்தாரா


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 29 நவம்பர் 2016 (22:07 IST)
மலையாள பாஸ்கர் தி ராஸ்கல், மாயா போன்ற சில படங்களில் அம்மாவாக நடித்துள்ளார் நயன்தாரா. அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் புதிய படம் ஒன்றிலும் அவர் 4 வயது குழந்தைக்கு தாயாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

 

 
டோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் என பல படங்களில் நயன்தாரா நடிக்கிறார். இதில் இமைக்கா நொடிகள் தவிர மற்ற அனைத்தும் நாயகி மையப்படங்கள்.
 
அஜய் ஞானமுத்து இயக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா இருந்தாலும் கதை நயன்தாராவை சுற்றித்தான் நகர்கிறதாம். இந்தப் படத்தில் அவர் 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதாக படக்குழு தகவல் தெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :