திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (15:39 IST)

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என ஏற்று கொள்ள முடியாது: நடிகை கஸ்தூரி

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகை கஸ்தூரி தெரிவித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தென்னிந்தியாவில் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அங்கீகரிக்க முடியாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 
 
என்னை பொருத்தவரை நடிகைகளில் லேடி சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் பழம்பெரும் நடிகைகள் கே பி சுந்தராம்பாள் மற்றும் விஜயசாந்தி போன்றவர்கள் தான் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
அவரது இந்த கருத்தை நயன்தாராவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் வகையில் உள்ளது என்று நயன்தாரா ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran