செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (15:37 IST)

ராக்கி படத்துக்காக ப்ரமோஷன் செய்யும் நயன்தாரா!

ராக்கி படம் இன்னும் 3 தினங்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்கள் ரௌடி பிக்சர்ஸ் மூலமாக வெளியிடுகிறார்கள்.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து முடித்துள்ள ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த படம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்கள் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக விநியோகம் செய்கின்றனர். இந்நிலையில் படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக நயன்தாரா நடித்துள்ள ப்ரமோஷன் வீடியோவை இன்று படக்குழு வெளியிட உள்ளது. தான் நடிக்கும் படத்துக்கே ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நயன்தாரா இன்னொரு நடிகரின் படத்துக்கு ப்ரமோஷன் செய்வது கவனத்தை ஈர்த்துள்ளது.