1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (16:49 IST)

நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் ஓடிடியா? தியேட்டரா?

நடிகை நயன்தாரா இப்போது அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாராவின் புதிய படத்திற்கு ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம்கெர் ஆகியோர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படமும் நெற்றிக்கண் மற்றும் மூக்குத்தி அம்மன் போல ஓடிடியில் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கண்டிப்பாக திரையரங்கில்தான் வெளியாகும் என்று இந்த படத்தில் நடித்து வரும் அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.