வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (19:21 IST)

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மகனின் படத்தில் நயன்தாரா: அதிரடி ஆக்ஷன் படமா?

நடிகை நயன்தாரா இளம் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு அதிகமாக விருப்பம் உள்ளவர் என்றும் கதை நன்றாகவும் தனது கேரக்டர் நன்றாகவும் இருந்தால் இயக்குனர் மற்றும் உடன் நடிக்கும் ஹீரோ குறித்து அவர் கவலைப்பட மாட்டார் என்பதும் தெரிந்தது 
 
அந்த வகையில் பழம்பெரும் சண்டை பயிற்சி இயக்குனர் ராம்போ ராஜ்குமாரின் மகன் நவ்காந்த் என்பவரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது 
 
நவ்காந்த் இயக்கும் முதல் திரைப்படமான இந்த படத்தில் நயன்தாரா தனது கேரக்டர் பற்றி அறிந்ததும் அசந்துவிட்டதாகவும், இதுவரை தான் நடிக்காத கேரக்டர் என்பதால் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது 
 
முதல் முறையாக நடிகை நயன்தாரா முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் டூப் இல்லாமல் ஒரு சில சண்டைக் காட்சிகளில் நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இயக்குனர் நவ்காந்த், ஸ்டண்ட் இயக்குனர் என்பதால் இந்த படத்தில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் தூள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது