நயன்தாரா படத்தை தயாரித்து தயாரிப்பில் காலடி எடுத்து வைத்த யுவன் ஷங்கர் ராஜா


Sasikala| Last Updated: சனி, 19 நவம்பர் 2016 (18:05 IST)
நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம் படத்தை பூஜா ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா.

 
 
தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பது யுவனின் பலவருட ஆசை. பலரிடம் கதையும் கேட்டார். இதற்கெல்லாம் முன்பு செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா, யுவன் மூவரும் இணைந்து ஒயிட் எலிபென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர். அதெல்லாம் அரை, கால் கிணறு தாண்டிய சம்பவங்கள். 
 
இப்போதுதான் முதல்முறையாக ஒரு படத்தை தயாரிக்கிறார். ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் என்று தனது பெயரையே தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்துள்ளார்.
 
சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்குகிறார்.

 


இதில் மேலும் படிக்கவும் :