திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (11:47 IST)

நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவன் பெயர் மாற்றம் ஏன்?

நயன்தாராவும், விக்னேஷ் சிவன் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்படும் நிலையில் நயன்தாரா சமீபத்தில் தன் புதிய  காதலருக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில்  ரகசியமாக விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்று வந்திருக்கிறார் நயன்தாரா. நயன்தாராவுக்கு இந்தக்காதலாவது கல்யாணத்தில் முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 
இந்நிலையில் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் காதலர்களான விக்னேஷ் சிவன், நயன்தாரா. இந்த காதல் எப்போது  திருமணத்திற்கு வரும் என தெரியவில்லை.
 
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் திடீரென தனது பெயரை மாற்றியுள்ளார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளார். Vignesh Shivan என முதலில் குறிப்பிட்டிருந்த அவர், தற்போது Vignesh Shivn என மாற்றியுள்ளார். 
 
இந்த பெயர் மாற்றம் நியூமிராலஜிக்காக என கூடும் என கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து ‘தானா  சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். தானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு அதிரடி காதல் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.