திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (15:33 IST)

ஜூலை 20ல் தொடங்கும் நயன்தாராவின் அடுத்த பட ஷூட்டிங்!

நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.

நடிகை நயன்தாரா கதாநாயகி பாதித்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள நடிக்க ஆரம்பித்தது மாயா படத்தின் வெற்றிக்குப் பின்னர்தான். அந்த படத்துக்குப் பின்னர் அறம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து அவர் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னர் செலக்ட்டிவ்வாக படங்களை தயாரித்து வந்த நயன்தாரா இப்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்த லாக்டவுன் சமயத்தில் மட்டும் 8க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும், அதில் இரண்டு படங்கள் டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு ஜூலை 20 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் என்பவர் இயக்க உள்ளார்.