1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (11:05 IST)

கருப்பாக இருப்பதும் அழகுதான்… நடிகை பிரியாமணி ஆதங்கம்!

நடிகை பிரியாமணி நிற ரீதியாக ரசிகர்கள் தன்னை விமர்சிப்பது குறித்து பேசியுள்ளார்.

பருத்தி வீரன் படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக நிலை நிறுத்திக் கொண்ட பிரியாமணி, தேசிய விருது வரை சென்றார். ஆனால் அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வராததால் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி எனக் கிடைத்த வேடங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் தொடர் கவனம் பெற்றது. அதையடுத்து இப்போது அதன் சீசன் 2 வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘நான் கருப்பாக இருக்கிறேன். குண்டாகிவிட்டேன். எனக்கு வயதாகிவிட்டது என  விமர்சனங்கள் செய்கிறார்கள். யாரையும் அதுபோல விமர்சிக்காதீர்கள். கருப்பாக இருப்பதும் அழகுதான்’ எனக் கூறியுள்ளார்.