ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (14:08 IST)

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

பாலிவுட்டின் ராஜமௌலி என்று சஞ்சய் லீலா பன்சாலியை சொல்லலாம். மிகப்பிரம்மாண்டமாக அழகியல் தன்மையோடு புராணப் படங்களை எடுப்பதில் புகழ் பெற்றவர் பன்சாலி. சமீபத்தில் அவர் இயக்கிய கங்குபாய் கத்யவாடி படத்துக்காக ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இதையடுத்து அவர் 1952 ஆம் ஆண்டு வெளியான பைஜு பாவ்ரா படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜவான் படம் மூலமாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. அந்த படம் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில் இப்போது அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன.