செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:30 IST)

தொடங்கிய நயாட்டு படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு!

மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற நாயாட்டு திரைப்படம் இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த படத்தின் பெருவெற்றி  தடுக்கப்பட்டது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகி கேரளா தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தில் நடித்த குஞ்சாக்கா போபன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் நிமிஷ விஜயன் ஆகியோர் பாராட்டுகளைப் பெற்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல தெலுங்கில் அல்லு அர்ஜுனின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், இந்தியில் நடிகர் ஜான் ஆப்ரஹாமும் ரீமேக் உரிமைகளை வாங்கியுள்ளார்களாம்.

இந்நிலையில் இவற்றில் முதல் முதலாக தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு இப்போது தொடங்கியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கருணாகுமார் இயக்க உள்ளார். ராவ்பகதூர், அஞ்சலி மற்றும் பிரியதர்ஷி ஆகியோர் நடிக்க உள்ளனர்.